திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்துவந்தவர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(ஜூலை 6) காலை உயிரிழந்தார்.
கரோனா தொற்றால் வட்டாட்சியர் உயிரிழப்பு - திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்தவர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று(ஜூலை 6) காலை உயிரிழந்தார்.
tahsildar died for Corona infection
இதனைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் சிவக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மூன்று நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்களும் ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன் மதன்மோகன் சீனிவாசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.