திருவள்ளூர் :திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரை பகுதியில் உள்ள நேதாஜி நகர், அண்ணாநகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர். அதற்காக, கும்மிடிபூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் அறிவுறுத்தலின்படி, ஒன்றிணைந்து அந்த பகுதிகளில், 3 லட்சம் மதிப்பிலான, 36 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். புதிய கண்காணிப்பு கேமராக்களை நேரில் ஆய்வு செய்த துணை கண்காணிப்பாளர் ரமேஷ், அதன் கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், மருத்துவர் கென்னடி, ஆய்வாளர் சக்திவேல் மற்றும் துணை ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டியில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன! - கும்மிடிப்பூண்டி செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த, மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான, 36 புதிய கண்காணிப்பு கேமராக்களையும், கட்டுப்பாட்டு அறையையும் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் திறந்து வைத்தார்.
Surveillance cameras fitted