ஆந்திரா மாநிலம் அம்மம்பள்ளி கிருஷ்ணா நீர் தேக்கத்திலிருந்து 1000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு கொசஸ்தலை ஆற்றின் வழியாக விநாடிக்கு 198 கனஅடி நீர் பூண்டி வந்துகொண்டிருக்கிறது.
இதனால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு உயர்ந்துவருகிறது. தற்போது மொத்தம் 35 அடியில் நீரின் அளவு 33.16 ஆக உள்ளது. ஏற்கனவே ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் விநாடிக்கு 551 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.