தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்களே உஷார்! - பூண்டி அணை

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் திறப்பு 4,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், கொசஸ்தலை ஆறு, poondy water reservoir, பூண்டி அணை
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்

By

Published : Nov 7, 2021, 6:18 PM IST

திருவள்ளூர்: நேற்றிரவு முதல் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருவதால், பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு உயர்ந்து வருகிறது.

இன்று முற்பகல் 11 மணி நிலவரப்படி, நீர் இருப்பு 2,908 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 5,561 கன அடியாகவும் உள்ளது. கொசஸ்தலை ஆற்றில் காலை 6 மணிக்கு நீர் திறப்பு 1,000 கன அடியாகவும், 8 மணியளவில் உபரி நீர் 2,000 கன அடியாகவும் வெளியேற்றப்பட்டது.

பூண்டி சத்தியமூர்த்தி அணை

காலை 9 மணி நிலவரப்படி, நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக உயர்த்தி வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நீர் வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால், தற்போது 11 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

பூண்டி நீர்த்தேக்கம்

இதனையடுத்து உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எரையூர், பீமன்தோப்பு, கொரக்கத்தண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், மடியூர், சீமாவரம், மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் இரு புறமும் வசிக்கும் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:சென்னை பெருமழை: அம்பத்தூரை துவம்சம் செய்த விடா மழை

ABOUT THE AUTHOR

...view details