ஒவ்வொரு ஆண்டும் திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் தொடங்கிய கிருத்திகை திருவிழா இன்று அதிகாலை தொடங்கி, முதலில் மூலவர் முருகப் பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்பு தங்க கவச அலங்காரம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு முருகன் காட்சி அளித்தார். இதேபோல் காவடி மண்டபத்தில் மூலவர் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்நிகழ்ச்சியை காண வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, காவடி எடுத்தும் உடலில் அலகு குத்திக் கொண்டும், மயில் காவடி மற்றும் புஷ்ப காவடி எடுத்தும் தங்களின் நோர்த்திக் கடன்களை செலுத்தினர்.