திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் கலந்துகொண்டு பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த 16 மாணவர்கள், தேசிய அளவில் சிலம்பாட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மாணவர் லோகேஷ் ஆகியோரைப் பள்ளி சார்பில் பாராட்டி பரிசு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.