தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்றுகள் நட்டு வைத்த காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர்: காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்து, துப்புரவுப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கினார்.

Superintendent of Police Aravindan
Superintendent of Police Aravindan

By

Published : Jun 5, 2020, 10:43 PM IST

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவிற்கு தலைமையேற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மரக்கன்றுகள் நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதையடுத்து அவர் துப்புரவுப் பணியாளர்கள் 30 பேருக்கு அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கியத் தொகுப்பை வழங்கினார். மேலும் அந்த விழாவில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details