அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உத்தரவின்பேரில் சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்கும்பொருட்டு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தகிக்கும் திருவள்ளூர்: மக்களின் தாகத்தை தணிக்க அதிமுக தண்ணீர் பந்தல் - summer's impact
திருவள்ளூர்: சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்க அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
வெயிலின் தாக்கம்: அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்!
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.வி. ரமணா தலைமை தாங்கி திருவள்ளூர் ஆயில் மில், பெரியகுப்பம், பஜார் வீதி, சி.வி. நாயுடு சாலை, ஜெ.என். சாலை, நேதாஜி சாலை, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம், மணவாளநகர் போன்ற 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தலைத் திறந்துவைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பழ வகைகளை வழங்கினார்.
இதையும் படிங்க:இன்றுமுதல் திருமலையில் இலவச தரிசனம் ரத்து