திருவள்ளூர் மாவட்டம் உழவர் சந்தை அருகே உள்ள இந்தியன் வங்கியில் அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து திருவள்ளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர்.
இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து... முக்கிய ஆவணங்கள் தீயில் கருகின... - rescue firing department
திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து!....
இருப்பினும் நகைக்கடன் பிரிவில் நகைக்கடன் வழங்கப்பட்ட ஆவணங்கள், கணினி, மின் விசிறி ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின. உயிர்சேதம் ஏற்படவில்லை. இகுறித்து போலீசார் விசரித்து வருகின்றனர். முதற்கட்ட தகவலில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:வீடியோ: சென்னையில் தனியார் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து