தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்குன்றத்தில் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு! - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர்: கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் திடீர் ஆய்வு.
கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் திடீர் ஆய்வு.

By

Published : Aug 27, 2020, 3:22 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கரோனா நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி ஸ்ரீமதிலதா நாரவாரிகுப்பம் பேரூராட்சியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு, திருவள்ளூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஜவகர்லால் மற்றும் கோட்டாட்சியர் சி.வித்யா பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் வட்டார மருத்துவ அலுவலர் ஜோஸ்பின், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் புழல் காவல் நிலைய உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலையில் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.

அப்போது, நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கலந்தாய்வு செய்தார்.

மேலும் அப்பகுதியில் உள்ள வியாபார கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முதல் அனைவரும் கட்டாயமாக பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் 60 வயதுக்கு மேற்பட்டோர் வீடுகளில் உள்ளவர்கள் மற்ற எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் அப்பகுதியிலுள்ள பெரியார் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை பார்வையிட்டு அதிலுள்ள மருத்துவர்களிடம் சிகிச்சைகள் பற்றியும் சோதனைகள் பற்றியும் கேட்டறிந்தார். பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் விவரங்களை கேட்டறிந்து அவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details