திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளுமேடு என்ற பகுதியில் பிரேம் என்பவருக்குச் சொந்தமாக கோழிப் பண்ணை உள்ளது.
கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து! - Tiruvallur district news
திருவள்ளூர்: பொன்னேரி அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒன்றரை லட்சம் மதிப்பிலான நான்காயிரம் கோழிகள் தீயில் எரிந்து உயிரிழந்தன.
இந்நிலையில், இன்று (அக்.20) அதிகாலையில் அங்கு திடீரேன தீ விபத்து ஏற்பட்டது. இது கோழி குஞ்சுகளை சூடு படுத்தும் மின்சாரத்தில் இருந்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில், ஒன்றரை லட்சம் மதிப்பிலான நான்காயிரம் கோழிகள் தீக்கிரையாகின. இந்த தீ விபத்து குறித்து பொன்னேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:அரசு ஊழியர்கள் நவ. 26இல் வேலைநிறுத்தப் போராட்டம்