திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் வஉசி குறித்த கருத்தரங்கம் மற்றும் ஆசிரியர் தின நிகழ்ச்சி ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் பிரைட் சங்கத்தின் தலைவர் ஆர்யா சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வஉசி குறித்த கருத்தரங்கில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு அவரது வாழ்க்கை வரலாறு , சுதந்திரப் போராட்டத்திற்கான பங்கு குறித்து தனது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
ஆசிரியர்களுக்கு பாத பூஜை
பின்னர் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் காக்களூர் சின்னி ஸ்ரீராமுலு செட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பணிபுரியும் 14 ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவர்கள் பாதபூஜை செய்தனர்.
அப்போது பழம், பூ, மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவற்றை கொண்டு ஆசிரியர்களை நாற்காலியில் அமரவைத்து மாணவர்கள் ஆசிரியர்களின் பாதங்களை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு பாதபூஜை செய்து அவர்களுக்கு தாம்பூலத் தட்டு கொடுத்தனர்.