ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் சார்பில் சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் விண்வெளி கற்கள் ஆராய்ச்சி குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
விண்வெளி கற்கள் ஆராய்ச்சி குறித்த பயிற்சி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு! - asteroid
சென்னை: ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட விண்வெளி கற்கள் ஆராய்ச்சி குறித்த பயிற்சி வகுப்பில் 25க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்
இதில், பயிற்சி வகுப்பில் கலந்தகொண்ட மாணவர்கள் கூறியதாவது: "பிரபஞ்சத்தில் உள்ள கற்கள், எரிகற்கள் ஆகியவற்றை எப்படிக் கண்டறிவது, அதனை எப்படி பின் தொடர்ந்து அதன் தன்மைகளைக் கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பினால் நாங்கள் எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த படிப்புகளில் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைத்து இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்போம்" என்றனர்.