தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் யோகா செய்து அசத்திய மாணாக்கர் - World Yoga day

திருவள்ளூர்: உலக யோகா நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாணவ, மாணவியர் தகுந்த இடைவெளியுடன் யோகா செய்து அசத்தினர்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் மாணவ மாணவியர்கள் சமூக இடைவெளியுடன்  யோகா செய்து அசத்தினர்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் மாணவ மாணவியர்கள் சமூக இடைவெளியுடன் யோகா செய்து அசத்தினர்.

By

Published : Jun 22, 2021, 6:17 AM IST

உலக யோகா நாளை முன்னிட்டு கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கும்போதும், சிகிச்சைக்குப் பிறகு உடலில் ஆக்சிஜன் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதற்கும் யோகா அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.

இயற்கையாகவே பிராண சக்தியைக் கூட்டுவதற்கும், நுரையீரலைப் பலப்படுத்த மூச்சுக் காற்றினை உள்வாங்கும் பயிற்சிகள் யோகாவில் உள்ளதால் கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இதனை வெளிப்படுத்தும்விதமாக பொன்னேரியில் பிரபல யோகா ஆசிரியர் ஞானசேகர் ஏற்பாட்டில் மாணவ, மாணவிகள் தகுந்த இடைவெளியுடன் யோகா செய்து அசத்தினர். இதன்மூலம் அனைவரும் யோகாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details