தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - Fire department

திருத்தணி அருகே விவசாய கிணற்றில் மூழ்கி ஒன்பதாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.

திருவள்ளூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
திருவள்ளூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

By

Published : Aug 29, 2022, 7:39 AM IST

திருவள்ளூர் மாவட்டம்திருத்தணி அருகே உள்ள காஞ்சிபாடி கிராமத்தில் மணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் உள்ள கிணற்றில் சுற்றுவட்டார கிராம இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் குளிப்பது வழக்கம். அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 28) நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற 9ஆம் வகுப்பு மாணவன் மூழ்கி உயிரிழந்தான்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீசார், தீயணைப்புத்துறை அலுவலர்களுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை மீட்டனர். முதல்கட்ட தகவலில், உயிரிழந்த மாணவன் பெயர் யோகவேல் தொமூர் கிராமத்தில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:கத்தினோம்..கேட்கவில்லை.. ஊட்டி தொட்டபெட்டாவில் பெண் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details