திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பெரு நகராட்சி பகுதி பட்டாபிராம், தண்டுரை, ஆவடி காமராஜர் நகர், பருத்திப்பட்டு, திருமுல்லைவாயில், கோவில் பதாகை, முத்தா புதுபேட் என்று 65 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 48 வார்டுகள் உள்ள ஆவடி நகராட்சியில் சுமார் ஐந்து லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கே நாளொன்றுக்கு சுமார் 200 டன் குப்பைகள் பேட்டரி சைக்கிள் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் அள்ளப்பட்டு வருகிறது.
ஒரு மாதமாக குப்பை அள்ளுவதில் தேக்கம் - பொதுமக்கள் வேதனை - public fear
திருவள்ளூர் : ஆவடி பெரு நகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குப்பை அள்ளுவதில் தேக்கம் ஏற்பட்டு வருவதால் சாலைகள் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
குப்பை அள்ளுவதில் தேக்கம்
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக புதிய டெண்டர் விடுவதிலும், ஆட்கள் பற்றாக்குறையினாலும் குப்பை அள்ளுவதில் தேக்கம் நிலவிவருவதாக கூறப்படுகிறது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் குப்பை தேங்கி கிடக்கிறது. இதனால் சாலையில் துர்நாற்றம் வீசுகிறது, இதன் முலம் கொசு உற்பத்தி அதிகரித்து தொற்றுநோய் பரவும் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.