திருவள்ளூர் மாவட்டம் கிராமிய தெருக்கூத்து நாடகக் கலைஞர்கள் சார்பில் அதன் நிர்வாகிகள் கமலக்கண்ணன் ஆசிரியர், ரூபன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமிய தெருக்கூத்து கலைஞர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உள்ளோம். நாங்கள் அனைவரும் தெருக்கூத்து நாடகத்தை நம்பியே பிழைப்பு நடத்திவருகிறோம்.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவைப் பிறப்பித்து ஊரடங்கு அமல்படுத்தின. இதனால் நாங்கள் அனைவரும் வேலை இல்லாமல் குடும்பத்துடன் பாதிக்கப்பட்டுள்ளோம்.