திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கேஜி கண்டிகையில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ நேற்று இரவு உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று காலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றபோது, இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி: போலீசார் விசாரணை! - தனியார் ஏடிஎம்
திருவள்ளூர்: திருத்தணி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற சம்பவத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
atm theft
இதனையடுத்து, திருத்தணி காவல் துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.