State level mens competition: திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி பட்டாபிராம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் கனகு கிளாசிக் உடற்பயிற்சி கூடம் இணைந்து தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக ஒரு லட்சம் சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியானது நடைபெற்றது. இதில் 11 பிரிவுகள் சீனியர், மேன்பிசிக், பிசிக்ஸ் ஓவரா சாம்பியன் உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 272க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆணழகன் போட்டியில் தங்களது கட்டமைப்பான உடல்களை பல்வேறு வடிவங்களில் காண்பித்து திறமைகளை போட்டியாளர்கள் வெளிக்காட்டினர்.