திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி சார்பாக 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்! - Co-operative Bank Staff
திருவள்ளூர்: ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
அப்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு புதிய ஊதிய வழங்கவும், தற்போதுள்ள பதிவாளர்கள் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து சம்ப இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.