திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பரப்புரை பயணம் மாநிலம் முழுவதும் நடந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள்பட்ட குன்றத்தூர் பகுதியில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், ஆலந்தூர் எம்எல்ஏ தா.மோ. அன்பரசன் ஆகியோர் தலைமையில் அமைப்புசாரா தொழிலாளர்களுடன் கலந்துரையாடி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து குன்றத்தூரில் திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சேக்கிழார் மணிமண்டபத்தை ஆய்வுசெய்தனர். மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் கருத்து கேட்டு அப்பகுதியில் உள்ள குறைகளைக் கேட்டறிந்தனர்.