தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் தினம்: பழங்குடியின மக்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பழங்குடியின மக்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகளிர் தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

sports-competition-for-aboriginal-people-on-womens-day
sports-competition-for-aboriginal-people-on-womens-day

By

Published : Mar 15, 2020, 8:44 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் பழங்குடியினருக்கான மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மறுவாழ்வு சங்க ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசில் குழு செயலாளர் நீல வனத்து வண்ணன், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மேலும் இவ்விழாவில், பெண்களின் உரிமை, பெண்களுக்கான சட்டங்கள், பெண் சுதந்திரம் உள்ளிட்டவைகள் குறித்து சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து பழங்குடியின மாணவர்கள், பெண்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கடம்பத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள பழங்குடியின பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மகளிர் தினத்தையொட்டி பழங்குடியின மக்களுக்கான கலைநிகழ்ச்சிகள்

இதையும் படிங்க:கொரோனோ பாதிப்பு: நாகை வந்த 49 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகத் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details