கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட்போன் கேட்டு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுவரை ஸ்மார்ட்போன் வழங்காத நிலையில் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்ட போது ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது எனக் கூறியதாகவும், ஆனால், இதுவரை யாரும் பெறாத நிலையில் வழங்கியதாக கூறுவதுடன் மாற்றுத் திறனாளிகளான தங்களை அலட்சியப்படுத்துவதாகவும் கூறி இன்று(பிப்.15) 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.