திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக, கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி போடும் சிறப்பு மருத்துவ அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் உள்ள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமினை
மாவட்ட ஆட்சியர், ம.ப.சிவன்அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதேபோல, வாணியம்பாடி நகராட்சி நிர்வாகமும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைந்து நடத்திய இலவசத் தடுப்பூசி முகாமில் சுமார் 600-க்கும் அதிகமானோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இங்கு, சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் முகாமினை தொடங்கி வைத்தனர்.