திருவள்ளூர்:மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி.,யின் 76ஆவது பிறந்த நாளான நேற்று (ஜூன் 4) திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உள்ள நினைவிடத்தில் எஸ்பிபி.,யின் மனைவி சாவித்திரி மற்றும் அவரது மகன் சரண் ஆகியோர் அவரது திருவுருவ படத்தை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 6 டன் எடையுள்ள சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
எஸ்.பி.பி., நினைவிடத்தில் குடும்பத்தினர் அஞ்சலி - singer saran speaks to the press
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் பிறந்த நாளான நேற்று (ஜூன் 4) அவரது குடும்பத்தினர் அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

எஸ்.பி.பியின் பிறந்தநாளன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர்
அதைத் தொடர்ந்து நேற்று ஒரு நாள் ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது நினைவிடத்தில் மணி மண்டபம் கட்டுவதற்கான பணிகளை அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஸ்பிபி சரண் தெரிவித்தார்.
எஸ்.பி.பியின் பிறந்தநாளன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர்
இதையும் படிங்க:HBD SPB: பாடகர்.. டப்பிஸ்ட்.. நடிகர்.. இசையமைப்பாளர்.. எஸ்பிபியின் 360!