திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு காவலன் செயலி பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் எஸ்பி அரவிந்தன் கலந்துகொண்டு, ' காவலன் செயலியைப் பயன்படுத்தினால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து நேரங்களில் 5 விநாடிகளில் காவல் துறை உதவும்' என்றும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் விளக்கமாகத் தெரிவித்தார்.
'பெண்களுக்கென காவலன் SOS என்னும் செயலியை காவல் துறை கொண்டு வந்தாலும். அதனை பயன்படுத்துபவர்கள் குறைவுதான். எந்தச் சூழ்நிலையிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை வந்தால் SOS பட்டனை அழுத்தினால் போதும். ஜிபிஎஸ் மூலம் ஆபத்து நேரத்தில் அவர்கள் எந்தச் சூழ்நிலையில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை காவல் துறை தெரிந்து கொள்வார்கள்' என்றார்.