திருவள்ளூர்: வெங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணன் (50). இவரது மகன் பாண்டியன் (28) மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டுவந்துள்ளனர்.
சிகிச்சை கொடுத்தும் குணமாகவில்லை என்பதால் இவருக்குத் திருமணம் செய்துவைக்காமல், வீட்டில் வைத்துப் பெற்றோர் கவனித்துவருகின்றனர். இந்நிலையில் நேற்று (நவம்பர் 21) பாலகிருஷ்ணனின் மனைவி உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில் தந்தையும், மகனும் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது தொடர் மழை பெய்ததன் காரணமாக மின்சாரம் தடைப்பட்டது. இதனையடுத்து பாலகிருஷ்ணன் பாண்டியனிடம் மெழுகுவர்த்தி கொண்டுவருமாறு கூறியுள்ளார். அதனை செய்ய மறுத்த காரணத்தினால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.