திருவள்ளூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சர்வதேச நீதி முகமை ஆகிய தனியார் அமைப்புகள் இணைந்து ஆள்கடத்தலை தடுப்பது சம்பந்தமான பயிலரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘ஏழ்மையின் காரணமாக இதுபோன்ற ஆள்கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறது.
‘கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் வழங்க வேண்டும்’ - முதன்மை நீதிபதி பேச்சு - District Chief Justice
திருவள்ளூர்: கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிலை வழங்க அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
District Chief Justice
இதுகுறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மாற்று தொழிலை வழங்க அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றார்.