தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாய் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! - Thiruvallur Thiruverkadu

திருவேற்காடு அருகே படிக்கவில்லை என தாய் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
தாய் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

By

Published : May 13, 2022, 11:17 AM IST

திருவள்ளூர் திருவேற்காடு அடுத்த சின்ன கோலடி பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன் - சரண்யா தம்பதி. இவர்களின் மகள் ஜனனி(11) என்ற ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனனி படிக்காமல் வீட்டில் வரைபடம் வரைந்து கொண்டிருந்தார்.

இதனால் அவரது தாய் சரண்யா படிக்காமல் ஏன் வரைபடம் வரைகிறாய் எனத் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி ஜனனி, வீட்டில் இருந்த புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, திருவேற்காடு போலீசார் இறந்து போன ஜனனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:குடும்பத்தகராறு - கணவரை சுத்தியலால் அடித்துக்கொலை செய்த மனைவி கைது!

ABOUT THE AUTHOR

...view details