திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி அருகே, பாப்பான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள், ஜெயசந்திரன்-லட்சுமி தம்பதியர். இவர்களது மகள் தேஜாஸ்ரீ (6), தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.தேஜாஸ்ரீ கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இரண்டு ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறார்.
அசத்திய 6 வயது சிறுமி: யோகாவில் உலக சாதனை - கும்மிடிபூண்டியில் ஆறு வயது சிறுமி உலக சாதனை
கும்மிடிப்பூண்டியில் ஆறு வயது சிறுமி, யோகாவில் சாதனைப்படைத்து 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்' புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
அசத்திய 6 வயது சிறுமி
தற்போது அவர் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார். அதாவது தலை கவிழ்ந்து படுத்தபடி, இரு கால்களை தலைக்கு முன் கொண்டு வரும், கண்டபேருண்டாசனத்தை, ஒரு நிமிடத்தில், 38 முறை செய்து, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்' புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சாதனை படைத்த சிறுமிக்கும், அவருக்கு பயிற்சி அளித்த யோகா பயிற்றுனர் சந்தியாவிற்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: துணை கமிஷனர் அரவிந்தன் உள்பட 13 பேர் பணியிடமாற்றம்!