திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் ஏரி, ஆரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின் அடிப்படையில் அவருடைய உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை காவல் துணைக் காணிப்பாளர் சந்திரகாசன் தலைமையில் பெரியபாளையம் காவல் துறை ஆய்வாளர் மகேஸ்வரி, துணை ஆய்வாளர் மனோஜ் பிரபாகர் தாஸ், காவலர்கள் உள்ளிட்ட சிலர் இரண்டு நாள்களாக மாறுவேடத்தில் ஆரணி ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது அப்போது, இரண்டு லாரிகள் ஆரணி ஆற்றிலிருந்து மணல் கடத்துவது குறித்து தெரியவந்ததை அடுத்து, லாரிகளைப் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநர்களான நாகராஜ், தமிழரசு உட்பட ஐந்து பேரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மேலும், லாரிகளின் உரிமையாளரும் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவரைக் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்பின்பு இந்த ஆறு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:'டெல்லி துப்பாக்கிச் சூடு கண்டனத்திற்குரியது' - ராஜா ஹுசைன் பேட்டி