தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கையின் திருமண நாள் - சகோதரர் உயிரிழப்பு - சகோதரி திருமண நாள்

திருவள்ளூர்: பூவிருந்தவல்லியில் தங்கையின் திருமண நாளை கொண்டாட மாடியில் பட்டாசு வெடித்தபோது தவறி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

pali
pali

By

Published : Aug 17, 2021, 9:57 AM IST

பூவிருந்தவல்லி ராஜா அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் வெங்கடேச பெருமாள்(39). கேட்டரிங் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். நேற்று இவரது தங்கைக்கு திருமண நாள் என்பதால் அதனை கொண்டாட பூவிருந்தவல்லி வைத்தி நகர் பகுதியில் உள்ள தங்கையின் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது வைத்து பட்டாசு வெடித்துள்ளார்.

சிறிது நேரத்தில் அனைவரும் வீட்டிற்குள் சென்றுவிட்ட நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வெங்கடேச பெருமாளை காணவில்லை என்றதால் அவரது செல்போனுக்கு அழைத்தபோது வீட்டின் பின் பகுதியில் இருந்த கால்வாயில் இருந்து சத்தம் கேட்டது.

அங்கு சென்று பார்த்தபோது வெங்கடேச பெருமாள் மாடியிலிருந்து கீழே விழுந்து மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேச பெருமாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பூவிருந்தவல்லி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேச பெருமாள் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details