திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் ரயில்வே துறை தலைவர் சைலேந்திர பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
அப்போது, தீயணைப்பு உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் தீயணைப்புத் துறையில் உள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்தும் தீயணைப்பு துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அதன்பின் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் சென்மேரிஸ் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து தேர்வினை எதிர்கொள்ள அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு வர உள்ளதால் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை.