தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள் - Indigenous people

திருவள்ளூர்: சாதி சான்றிதழ் வழங்கக் கோரி பழங்குடியின மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள்
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள்

By

Published : Mar 4, 2021, 11:13 AM IST

Updated : Mar 4, 2021, 1:43 PM IST

சாதி சான்றிதழ் வழங்கக் கோரி பழங்குடியினர் மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மலைக்குறவன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அரசு வேலைகளில் சேர்வதற்கும், சலுகைகள் பெறுவதற்கும் சாதி சான்றிதழ் வழங்கக் கோரி பலமுறை விண்ணப்பித்தும் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினர்.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள்

இதனால் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குக்கூட செல்ல முடியாத சூழல் ஏற்படுவதாகவும், இதனால் அவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதாகவும் கூறி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை நேரில் சந்தித்து மனு அளித்த பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:தேர்தல்: சோதனையில் சிக்கிய வியாபாரிகளின் பணம் கருவூலத்தில் ஒப்படைப்பு!

Last Updated : Mar 4, 2021, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details