தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சம்பளம் வழங்குவதில் திடீர் மாற்றம் - வருத்தத்தில் சித்த மருத்துவப் பணியாளர்கள் - சித்த மருத்துவர்கள்

சம்பளம் வழங்குவதில் திடீர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் சித்த மருத்துவத் துறை கவலை அடைந்துள்ளது.

சித்த மருத்துவ
சித்த மருத்துவ

By

Published : Aug 6, 2021, 6:46 AM IST

தமிழர் பாரம்பரியத்தில் பிரிக்க முடியாத ஓர் இடத்தைப் பிடித்திருப்பது தமிழர்களின் மருத்துவ முறைகளான சித்த வைத்தியம், ஆயுர்வேதம், இந்திய மருத்துவ முறைகளான யுனானி, யோகா போன்றவையாகும். அன்றுமுதல் இன்றுவரை அதாவது தற்போதைய கரோனா நோய்க்கும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்ற மருந்துகளை வழங்கி மக்களைக் காப்பாற்றிவருகிறது.

இதற்கான ஓர் தனித் துறையே இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி எனச் சென்னை அரும்பாக்கத்தில் இயங்கிவருகிறது. இதன் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு பிரிவு இயங்கிவருகின்றன.

அனைத்து அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் இயங்கிவரும் சித்த மருத்துவப் பிரிவுகளுக்கு அந்தந்த இடத்திலேயே சம்பளம் வழங்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் மருத்துவர்கள் அனைவருக்கும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சம்பளம் வழங்க வேண்டும் என அந்தத் துறையின் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் சம்பளம் வாங்கித் தர வேண்டும் என அரசாணைகள் இருக்கும் நிலையில், ஆணையர் எவ்வித அரசாணையும் அரசின் அனுமதி ஒப்புதல் கடிதமும் இல்லாமல் ஆணை பிறப்பித்துள்ளதால் என அத்துறை மட்டுமல்லாது, கருவூலத் துறையும் குழப்பத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் வெறும் 22 மாவட்ட சித்த மருத்துவ அலுவலகங்களே இயங்கிவருகின்றன. அதாவது 16 மாவட்டங்களுக்கு இன்னும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் ஏற்படுத்தப்படவில்லை. ஒரு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் நான்கு, மூன்று, இரண்டு மாவட்டங்கள் எனக் கவனித்துவருகின்றனர்.

அப்படி இருக்க நான்கு மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு அலுவலகத்தில், அதுவும் கண்காணிப்பாளர்கூட இல்லாத மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதவளத்துடன் செயல்படும் அமைச்சு பணியாளர்களைக் கொண்டு எவ்வாறு இது சாத்தியமாகும் என்று மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இது போன்ற சிக்கல்களை ஆணையரிடம் எடுத்துக் கூற முடியாத சூழலில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்களும், சம்பளம் கிடைக்குமா என்ற வினாவில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களும் இருப்பதாகக் குமுறுகின்றனர்.

எவ்வாறு இவ்வளவு சுமையைச் சுமப்பது என்ற கேள்விக் குறியுடன் அமைச்சு பணியாளர்களும் உழன்று கொண்டிக்கின்றனர். உரிய அரசுத் துறைகள் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று சித்த மருத்துவர்கள், பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சம்பளம் வழங்குவதில் திடீர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் சித்த மருத்துவத் துறை கவலை அடைந்துள்ளது.

இதையும் படிங்க:அரசியல் பிரச்னைகளால் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு நகரும் அமர ராஜா

ABOUT THE AUTHOR

...view details