திருவள்ளூர் மாவட்டம் ரயில் நிலையம் கருகுழாய் சாலையில், வசித்து வருபவர் சுரேஷ் (42). இவர் திருவள்ளூரில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகேயுள்ள வள்ளலார் தெருவில் நின்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சுரேஷை சரமாரியாக வெட்டினர்.
இதில், பலத்த காயமடைந்த சுரேஷ் ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து முதல் சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்டார்.