இன்று காலை திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரிலிருந்து தனியார் ஆலை பேருந்து ஒன்று பணியாளர்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் புதுப்பட்டு கிராமத்தில் உள்ள தர்காவில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வழிபாடு செய்து விட்டு ஷேர் ஆட்டோவில் கடம்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அகரம் சாலை அருகே எதிரெதிரே வந்த இரு வாகனங்களும் மோதிக்கொண்டதில் ஷேர் ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் பலத்த காயத்தோடு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து கடம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.