திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இயங்கிவரும் விஜயந்தா பள்ளியில் 2018-19ஆம் ஆண்டில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால், கணிப்பொறி துறை சார்ந்த 30 மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இந்த முறைகேட்டை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கருப்புத் துணியால் கண்களை கட்டிகொண்டு, மண்டியிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பிற்காக இருந்த காவல் துறையினர், மாணவர்களிடம் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுங்கள் என அறிவுறுத்தி அனுப்பினர்.