தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டல்: 2 இளைஞர்கள் கைது - பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டல்

திருவள்ளூரில் தனியார் நிறுவனத்தின் பேருந்தை மடக்கி பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டல்
பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டல்

By

Published : Apr 9, 2022, 7:28 AM IST

திருவள்ளூர்:நேமம் பகுதியில் இயங்கிவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பேருந்து மூலம் வீட்டில் இருந்து நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் பணி முடிந்ததும் வீட்டில் விடப்படுகின்றனர்.

இந்த நிலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களை ஏற்றிச்சென்ற அந்நிறுவனத்தின் ஒரு பேருந்தை அரண்வாயில் பகுதி அருகே இரண்டு இளைஞர்கள் திடீரென மடக்கி உள்ளே சென்றுள்ளனர். இரண்டு இளைஞர்களும் பெண் ஊழியர்களிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டல்

இதனை அறிந்த பொதுமக்கள் இரண்டு இளைஞர்களையும் பிடித்து பேருந்தில் இருந்து கீழே இறக்கினர். இதையடுத்து இளைஞர்கள் பேருந்து கண்ணாடிகளை உடைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை காவல் துறையினர் இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர்.

விசாரணையில் இருவரும் திருவள்ளூர் அடுத்த அரன்வாயில்குப்பம் பகுதியைச் சேர்ந்த கணேஷ், ரமேஷ் என்பதும் போதையில் பேருந்தை மடக்கி பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையும் படிங்க:Video: 'போலீசாரிடம் சொல்லிவிட்டு சாராய வியாபாரத்தை நிறுத்துகிறேன்' - வியாபாரியின் பகீர் பதில்!

ABOUT THE AUTHOR

...view details