தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... 74 வயது முதியவருக்கு 16 ஆண்டுகள் சிறை... - புழல் மத்திய சிறை

ஆவடியில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ வழக்கில் கைதான 74 வயது முதியவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

By

Published : Sep 29, 2022, 7:48 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2018ஆம் ஆண்டு ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமியின் தாயார் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தனது மகளுக்கு பக்கத்து வீட்டுக்காரரான 74 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்திருந்தார். இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மேலும் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்ததையடுத்து இன்று(செப்.29) திருவள்ளூர் மாவட்ட மகளிா நீதிமன்ற நீதிபதி சுபத்திராதேவி அதிரடி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 74 வயது முதியவருக்கு 16 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 4,500 ரூபாய் அபராதமும் விதித்திருந்தார். தீர்ப்புக்குப் பின் 74 வயது முதியவர் புழல் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையும் படிங்க:11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - 64 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

ABOUT THE AUTHOR

...view details