திருவள்ளூர்:புழல் புத்தகரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 11). இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கார்த்திக்கு இரு சகோதரர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தூக்கில் தொங்குவது எப்படி? என நேற்று (செப்.25) 7 மணிக்கு விளையாட்டாக தனது சகோதரர்களுடன் இணைந்து நடித்துக் காட்டியதாகக் கூறப்படுகிது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக்கை எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறுக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.