திருவள்ளூர்மாவட்டத் தலைநகரான திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனத் திருட்டு அதிகளவில் நடந்து வந்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார்கள் அளித்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு திருவள்ளூர் அடுத்த அயத்தூர் கிராமத்தைச்சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் பிரகாஷ் என்பவர் திருவள்ளூர் தேரடியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடைக்குச் சென்று திரும்பிய சிறிது நேரத்தில், அவரது இரு சக்கர வாகனம் திருடப்பட்டது.
இதுகுறித்து பிரகாஷ் திருவள்ளூர் நகரம் போலீசாரிடம் கொடுத்தப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளைக்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெவ்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து திருவள்ளூரில் வாகன சோதனையில் திருவள்ளூர் நகர ஆய்வாளர் பத்மஸ்ரீபபி ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப் பின் முரணாக அவர் பதில் அளித்ததையடுத்து தீவிர விசாரணை செய்தனர்.