திருவள்ளுர்:ஆந்திர மாநிலத்திலிருந்து திருத்தணி வழியாக செம்மரங்கள் கடத்துவது தொடர்கதையாக இருக்கிறது.
இதனால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பத்தில் மாவட்ட சிறப்பு காவல் பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த வேனை மடக்கிய போது நிற்காமல் சென்றது. இதனால் சிறப்பு காவல் படை பிரிவினர் வேனை விரட்டி சென்றனர். இதனால் வேனில் வந்தவர்கள் சாலையோர பள்ளத்தில் வேனை நிறுத்திவிட்டு அங்கிருந்து 2பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.