திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகேவுள்ள பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகரில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக செம்மரக் கட்டைகள் உள்ளிட்ட கடத்த பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் வனத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் வனச்சரகர் கிருஷ்ணகுமார் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த வீடு ஒன்றில் ஒரு டன் செம்மரக் கட்டைகள், 20 புலி பற்கள், 25 கிலோ எறும்பு திண்ணி செதில்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.