திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் விஜயநல்லூர் சுங்கச்சாவடி வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் குடிமைப்பொருள் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் டிஜிபி ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், எஸ்பி ஸ்டாலின் மேற்பார்வையில், டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர் கலைச்செல்வி, உதவி ஆய்வாளர் நந்தினி உஷா ஆகியோர் கொண்ட காவல் துறை விஜயநல்லூர் சோதனைச்சாவடி அருகே செங்குன்றம் பகுதியிலிருந்து ஆந்திரா நோக்கி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது 18 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பாண்டிச்சேரி ஏர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சுந்தரகுமார் என்பவரைக் கைது செய்தனர்.