செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் பின்புறம் உள்ள மைதானத்தில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன.
ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் தீவிபத்து: வாகனங்கள் நாசம் - red hills fire accident
திருவள்ளூர்: செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு கார்கள், நான்கு ஷேர் ஆட்டோக்கள் உட்பட 20 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
destroyed
இந்நிலையில், நேற்று அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பரவியது. இதனால், மைதானத்திலிருந்த இரண்டு கார்கள், நான்கு ஷோர் ஆட்டோக்கள் உட்பட 20 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமாயின.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.