தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில், காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர மாநிலம் சென்ற இரண்டு சிறிய ரக சரக்கு வாகனங்களை மடக்கி சோதனை மேற்கொண்டதில், ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்! - திருவள்ளூரில் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூர்: ஆந்திராவுக்கு கடத்த முயன்ற நான்கு டன் ரேஷன் அரிசியை ஆரம்பாக்கம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ration rice smuggled
இதையடுத்து, இரண்டு வாகனங்கள், நான்கு டன் ரேஷன் அரிசி ஆகிவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை ஆந்திராவுக்கு கடத்த முயன்ற விஜயன், கோபி, சந்தோஷ், ரஞ்சித் ஆகிய நால்வரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட அரிசி, கடத்தல் கும்பலை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.