திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்கலூர் கிராமத்தில் வசித்து வருபவர் சங்கர். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மகள் யோகேஸ்வரி (12) திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள c.s.i. உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி பலி - 7 ஆம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலுக்கு பலி
திருவள்ளூர்: திருத்தணி அருகே ஏழாம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் யோகேஸ்வரிக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். நேற்று காய்ச்சல் அதிகமானதால் அவரது பெற்றோர்கள் உயர் சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் ஏற்கனவே மருத வல்லிபுரம் கிராமத்தில் ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்கர்' வென்ற நடிகை கைது - கை விலங்குடன் அழைத்துச் சென்ற காவல்துறை!