திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ரயில்வேத் துறை டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி மாணவர்களிடம் உறையாற்றிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், செல்போன் உலக அழிவை ஏற்படுத்தும். தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டு, அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செல்போன் மோகத்தால் சீரழியும் மாணவர்கள் - டிஜிபி சைலேந்திரபாபு - டிஜிபி சைலேந்திர பாபு
திருவள்ளூர்: செல்போன் மோகத்தில் சீரழியும் மாணவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமூக பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்று ரயில்வேத் துறை டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
dgp sailendra babu
தவறான பாதையில் செல்வதற்கு செல்போனை அனுமதிக்கக் கூடாது. செல்போன் மோகத்தில் மாணவர்கள் சீரழிவதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் உன்னிப்பாக கண்காணித்து அவர்களை மீட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.