தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்டெய்னர் லாரியில் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு - திருவள்ளூரில் கண்டெய்னர் லாரியில் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய பள்ளி மாணவர்கள் இருவர் கண்டெய்னர் லாரியின் மீது மோதி உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்த மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த மாணவர்கள்

By

Published : Feb 24, 2020, 11:48 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலத்தைச் சேர்ந்த மாணவர் சுரேந்தரும் சோத்து பெரும்பேடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ் பாலாஜி ஆகிய இருவரும் எலைட் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்தனர்.

இந்நிலையில், இருவரும் செங்குன்றம் காந்தி நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்றுவிட்டு தங்களின் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, சாலையின் ஓரமாக நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மாணவர் சுரேந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், படுகாயமடைந்த தனுஷ் பாலாஜியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

விபத்தில் உயிரிழந்த மாணவர்கள்

அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் தனுஷ் பாலாஜியும் உயிரிழந்தார். இரண்டு பள்ளி மாணவர்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் இரு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோவையில் கத்தியைக் காட்டி பணம் பறித்த பள்ளி மாணவன் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details